Feb 4 – World Cancer Day – Dr Veda
புற்றுநோயிலிருந்து உயிர் பிழைக்க முடியும், டாக்டர் சொல்றதை கேளுங்க!
உலக புற்றுநோய் தினம் இன்று. புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை பொது சுகாதார பிரச்சனையாக மேம்படுத்துவதையும், தரமான பராமரிப்பு, முன்கூட்டிய பரிசோதனை, சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்பு முறைகளை மேம்படுத்த கடைப்பிடிக்கும் தினம்.
2022,2023 மற்றும் 2024 என மூன்று வருடங்கள் புற்றுநோய் சிகிச்சையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை புரிந்து (world cancer day theme 2023- cancer close the care gap) அதை நிவர்த்தி செய்வதற்கான முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு தீமை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறோம் என்கிறார் Dr.வேத பத்மப்ரியா, Senior Consultant ,Breast Oncology and Oncoplasty MGM healthcare. ஏன் புற்றுநோய் சிகிச்சைக்கு இவ்வளவு முக்கியத்துவம், எப்படி புற்றுநோயை தடுப்பது, ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது.
புற்றுநோய் சிகிச்சை இடைவெளி cancer close the care gap என்றால் என்ன?
இந்த புற்றுநோய் சிகிச்சை இடைவெளி என்பது புற்றுநோயாளிகளுக்கு மிக முக்கியமான ஒன்று. உலக மக்கள் தொகையில் பாதிபேருக்கு முழு அளவிலான அத்தியாவசிய மருத்துவ சிகிச்சையை சீரான இடைவெளியில் எடுப்பது கடினமான ஒன்றாக உள்ளது. புற்றுநோயாளிகளில் பலருக்கு அடிப்படை கவனிப்பு மறுக்கப்படுகிறது. புற்றுநோயை தடுப்பது, கண்டறிவது, சிகிச்சையிலும் நவீன சிகிச்சைகள் என்ற காலத்தில் இருக்கிறோம். ஆனால் இன்னும் சிகிச்சைக்கு அணுகுவதில் இருக்கும் இடைவெளியை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த தீம் உலகளவில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
புற்றுநோய் சிகிச்சை இடைவெளியால் உண்டாகும் பாதிப்பு?
இது ஈக்விட்டி இடைவெளியால் உயிர்களை இழக்க நேரிடலாம். புற்றுநோய் சிகிச்சையை எடுத்துகொள்பவர்கள் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான முன்னேற்றத்தை பெறுவார்கள். இதில் தடைபடும் போது தாக்கத்தை அதிகம் பெறுகிறார்கள். மிக தீவிரமான நிலையில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது.
புற்றுநோய் சிகிச்சை யாரெல்லாம் தவிர்க்கிறார்கள்?
கல்வி, புவியியல், இருப்பிடம், இனம், பாலினம், பாலியல் நோக்குநிலை, வயது, இயலாமை மற்றும் வாழ்க்கை முறை போன்ற அடிப்படை காரணங்கள் புற்றுநோயை எதிர்மறையாக பாதிக்கும் சில காரணிகளாக உருமாறுகிறது. குறிப்பாக பின் தங்கியவர்கள் புகையிலை, ஆரோக்கியமற்ற உணவு, சுற்றுச்சூழல் அபாயங்கள் போன்ற பிற ஆபத்து காரணிகளால் அதிக ஆபத்தை விரைவாக பெறுகிறார்கள்.
இவர்கள் புற்றுநோய் சிகிச்சை இடைவெளி எடுக்கும் போது அதிக பாதிப்பை உண்டு செய்யும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களில் பலரையும் இது பாதிக்கிறது. அதே நேரம் வளமான நாடுகளில் இருப்பவர்கள் புற்றுநோய் தாக்கத்துக்கு ஆளாகும் போதும் இந்த இடைவெளியை அலட்சியமாக எதிர்கொள்ளும் போது அது தனிப்பட்டவர்களை மட்டும் அல்லாமல் சமூகத்தில் உள்ளவர்களையும் பாதிக்கிறது என்றே சொல்லலாம்.
புற்றுநோய் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
புகையிலை, ஆரோக்கியமற்ற உணவு, மது மற்றும் புகைப்பழக்கம், தீங்கு விளைவிக்கும் வாழ்க்கை முறை, உடல் செயல்பாடின்மை போன்ற புற்றுநோய் ஆபத்து காரணிகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கருப்பை வாய் புற்றுநோயை உண்டு செய்யும் ஹெபடைடிஸ் பி மற்றும் சி. கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமான தொற்றுகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அதைகட்டுப்படுத்தலாம். இப்படி அறியப்பட்ட காரணிகளின் பரவலை குறைப்பதன் மூலம் மூன்றில் ஒரு பகுதியில் பாதி புற்றுநோய்களை தடுக்கலாம்.
மருத்துவரின் ஆலோசனையுடன் இளவயதிலிருந்தே பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தடுப்பூசிகள் போட்டுகொள்ள வேண்டும். புற்றுநோய்க்கான வாய்ப்புகள் இருந்தால் ஆரம்பத்திலேயே சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சைக்கான ஆதார அடிப்படையிலான சிகிச்சை மூலம் புற்றுநோயை தடுக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்.
புற்றுநோயாளிகள் சிகிச்சை பலனளிக்க என்ன செய்ய வேண்டும்?
புற்றுநோய் வருவதற்கு முன்பே அது குறித்த அறிகுறிகள் ஏதேனும் கண்டால் உதாரணத்துக்கு மார்பகத்தில் கட்டிகள், புரோஸ்டேட் சுரப்பி மாறுபாடுகள், உணவு குழாய் புற்றுநோய் அறிகுறிகள், கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்- போன்ற எதுவாக இருந்தாலும் முதலில் மருத்துவரை அணுகி ஒரு ஸ்க்ரீனிங் எடுத்துகொள்வது ஆபத்திலிருந்து மட்டுமல்ல முன்கூட்டியே கண்டறிந்து முழுமையாக குணப்படுத்தவும் முடியும்.
இவையெல்லாம் தாண்டி புற்றுநோய் நிலையை எட்டினால் அது 4 வகையாக பிரிக்கப்படும். இதில் முதல் கட்டத்திலோ இரண்டாம் கட்டத்திலோ கண்டறியப்பட்டாலும் குணப்படுத்திவிடலாம். ஆனால் அவர்கள் புற்றூநோய் சிகிச்சையை மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவர் அறிவுரைப்படி முறையான பரிசோதனைகள், சிகிச்சை முறைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட நாட்களில் பரிசோதனையும் சிகிச்சையும் மற்ற காரணங்களுக்காக தவிர்த்தல் கூடாது. ஒவ்வொரு சிகிச்சையும் நுணுக்கமானது. புற்றுசெல்களை அழிக்க கூடிய சிகிச்சையில் கால தாமதம் ஆனால் அது மீண்டும் உயிர்பெற்றுவிடலாம். அதனால் ஒவ்வொரு நாளும் நோய் தாக்கம் அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதற்காக பயம் வேண்டாம். ஆனால் இடைவெளி இல்லாத சிகிச்சை நிலையை உருவாக்கி கொள்ள வேண்டும். சூழ்நிலை, பொருளாதாரம் என்று பழிபோடாமல் சிகிச்சையை தொடரவேண்டும்.
ஆரம்ப நிலையில் 95% முழுமையாக குணப்படுத்திவிட முடியும் என்றாலும் குணமடைந்த பிறகும் முறையான பரிசோதனை மூலம் தொடர் கண்காணிப்பில் மருத்துவர் கூறும் வரை இருக்க வேண்டும்.
இதையெல்லாம் செய்தால் புற்றுநோய் சிகிச்சையிலிருந்தும் மீண்டு வரலாம். புற்றுநோய் வராமலும் தடுக்கலாம்.
- Article originally published in Tamil Samayam